
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
பதிகங்கள்

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
English Meaning:
Agamas Deep in ContentThe Agamas sublime, the Lord by Grace revealed,
Deep and baffling even to the gods in Heaven;
Seventy billion-millions though they be;
Like writing on the waters, eluding grasp.
Tamil Meaning:
சிவபெருமான் தனது திருவருள் காரணமாக அருளிச்செய்த மேலான ஆகமங்கள் வானத்தில் உள்ள தேவர் களாலும் அறிதற்கரிய பொருள்களை உடையன. அதனால், அவை அளவிறந்து கிடப்பினும், உயிர்கட்குப் பயன்படுதல் அரிது.Special Remark:
`அஃது அறிந்து சிவபெருமான் அவற்றைத் தானே நேராகவும், பிறர் வாயிலாகவும் பலர்க்கு விளக்கியருளினான்` என்பது குறிப்பெச்சம். ``நீர்மேல் எழுத்து`` பயன்கொள்ளுதல் அரிதாதற்கு உவமை. `அங்ஙனம் விளக்கம் பெற்றோர் இவர்` என்பதனை வருகின்ற திருமந்திரங்களால் கூறுவார்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage