
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- விநாயகர் வணக்கம்
- முதல் தந்திரம் - பாயிரம்
- முதல் தந்திரம் - 1. சிவபரத்துவம்
- முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு
- முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
- முதல் தந்திரம் - 4. உபதேசம்
- முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை
- முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை
- முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை
- முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை
- முதல் தந்திரம் - 9. கொல்லாமை
- முதல் தந்திரம் - 10. புலால் மறுத்தல்
- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு
- முதல் தந்திரம் - 13. நல்குரவு
- முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்
- முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
- முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை
- முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 18. தானச் சிறப்பு
- முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்
- முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
- முதல் தந்திரம் - 21. அன்புடைமை
- முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்
- முதல் தந்திரம் - 23. கல்வி
- முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
- முதல் தந்திரம் - 25. கல்லாமை
- முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை
- முதல் தந்திரம் - 27. கள்ளுண்ணாமை
Paadal
-
1. அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
-
10. வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே.
-
2. தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே.
-
3. மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.
-
4. பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
-
5. ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.
-
6. விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.
-
7. சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.
-
8. உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.
-
9. புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே.