
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பதிகங்கள்

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.
English Meaning:
Those who think they can attain the Siva-bliss through the senses.Are like children who played with sand considering it rice,
Those who do not understand that He cannot be pointed out objectively
Will ever remain ignorant.
Tamil Meaning:
சிறுமகார் தம் விளையாட்டு விருப்பம் காரணமாகத் தாம் சோறாகக் கருதிக்கொண்ட மணலாலே வயிறு நிரம்பினார் போலத் தேக்கெறிந்து கொள்ளுதல்போல, உலகப் பற்றுக் காரணமாகச் சுற்றத் தொடக்குண்டு வாழும் வாழ்க்கையாலே இன்பம் கிடைத்துவிடும் என்பவர் உளராயின் அவர், தம்மையும், தலை வனையும் அறியாத மடவோரேயாவர்.Special Remark:
`அதனால் அங்ஙனம் கொள்ளற்க` என்பது குறிப் பெச்சம். செறிவு - கூடியிருத்தல். இதற்கு, `செறியப் படுவார் இவர்` என்பது வருவிக்கப்பட்டது. ``அநுபோகம்`` என்பது சிறப்பினால் இன்ப நுகர்ச்சியையே குறித்தது. `அவர் குறியாதாரும், இருந்தாரும் ஆவர்` என்க. குறியாதது ஒன்று - சுட்டிறந்த முதற்பொருள். சிறப்புப் பற்றி இதனை முன்னர்க் கூறினார். `தம்மை யுணர்ந்து, அதனானே தலைவனையும் உணர்பவரே ஞானத் தலைவர்` என மெய்கண்ட தேவரும் கூறினார் (சிவஞானபோதம் அவையடக்கம்).இதனால், உலகாயதம் பேதைமைத்தாதல் கூறுமாற்றால், `ஆகா` என விலக்கிய கல்வி கேள்வி ஒழுக்கங்களுள் பெரிதும் கூடாதன இவை என்பது கூறப்பட்டது.
``நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்`` -தி.5 ப.31 பா.6
என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage