
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பதிகங்கள்

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.
English Meaning:
Listening to Dharma and to the words of the Holy,Listening to God`s valorous acts and the Devas` mantras many,
Listening to loud reports and the deeds peerless of the Lord,
The Lord whose body gleaming bright as gold are all to attain the Siva State. 300
Tamil Meaning:
முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.Special Remark:
`அதனால் அவைகளை இகழாது கேட்க` என்பது குறிப்பெச்சம். மறம் - வீரம். அஃது அரசர்க்குரிய பண்பாய் நின்று `பொருள்` என்னும் உறுதிப் பொருளை உணர்த்திற்று. புறம் - பிறிது; அஃது இன்பம். அந்தணர் இடைவிடாது பற்றி ஓதுதல் கன்ம காண்டத்தையேயாதலின், அதனை, ``அந்தணர் வாய்மொழி`` என்றார். வானவர் மந்திரம் - கடவுளரை வழிபடும் மந்திரங்கள். பொன்னுரை ஈசன் - பொன்னை உரைத்தாற்போலும் மேனியை உடைய சிவபெருமான். `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்புகளுள் தலைமைபற்றிப் பதி இயல்பு ஒன்றையே கூறினா ராகலின், ஏனையவும் அதன் கண் அடங்கும். கன்ம காண்டம் முதலிய மூன்றன் பொருளும் சிவாகமங்களுள் `தந்திர கலை, மந்திரகலை, உபதேசகலை` (சிவஞானசித்தி, அளவை, 4) எனப்படுமாகலானும், வேதத்திற்கும் சிவாகமத் திற்கும் பேதம் இன்மையானும் (தி.10 எட்டாம் தந்திரம்) அவ்வாகமப் பொருளும் ஈண்டுக் கூறியவாறேயாதல் அறிக. செய்யுள் பற்றி உலகியற் பொருளையும், மெய்ந்நெறிப் பொருளையும் முறைப்படுத்தோதாது, விரவ ஓதினார். `பெற்றது` என்பது ஈறுதொகுத்தல்.இதனால், கேட்கப்படும் பொருள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage