
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பதிகங்கள்

விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே.
English Meaning:
To seek Excellence and to Excellent things listen,And follow Wisdom`s true mandate — if to these the mind awake,
And if, then; you slip not nor stray, the Heavenly Lord,
Unhesitant, will be thine for ever — and never forsake.
Tamil Meaning:
`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.Special Remark:
`கல்வி விழுச்செல்வம்` (குறள், 400) ஆதலின், அதனை, ``விழுப்பம்`` என்றார். மெய்நின்ற - மெய் நிலைபெற்ற; இது `விழுப்பம், கல்வி` என்றவற்றோடும் இயைந்தது. வழுக்கி விழுத லாவது, பொய்யை மெய்யெனத் துணிதல். காலம் எல்லாப் பொரு ளினும் நுண்ணிதாய் அவற்றை நடத்துவதாயினும் வரையறை உடைத்தாகலின், அதனைக் கடந்த நிலையை, ``எண்ணிலி காலம்`` என்றார். மேற்கூறிய சிறப்புப்பற்றிக் காலத்தையே கூறினாராயினும், அதனொ டொத்த `முதற்பொருளாகிய` (தொல். பொருள்) இடமும் கொள்ளப்படும். படவே, `மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப் படாத இறை நிறைவை எய்துவர்` என்றதாயிற்று. கேள்வியே கூறப்புகுந்தாரா யினும் அத்தன்மையவாதல் பற்றி ஏனையவற்றையும் உடன் கூறினார். `வழுக்கி விடாவிடில்` என்பது பாடம்.இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage