
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்
பதிகங்கள்

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே.
English Meaning:
Life and body sure support for the soul provide,Listening to holy worldly things a sure prop and resting place,
Thoughts of Siva`s Holy Feet, the one Refuge to seek,
And with that support Supreme to aid, rebirth you wholly efface.
Tamil Meaning:
உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றது, யாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது; அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளே; பெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின், பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.Special Remark:
``ஆவது`` என்ற ஒருமையால், `உயிர் உடம்பிற்குத் துணையாவது, உடம்பு உயிர்க்குத் துணையாவது` எனத் தனித்தனி உரைத்தல் கருத்தாயிற்று. இத்தொடரின்பின், `அதற்கு` என்பது எஞ்சி நின்றது. சிந்தை, ஆகுபெயர்.இதனால், `சிவநெறிக் கேள்வியே விழுமியது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage