
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
- ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்
- ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்
- ஒன்பதாம் தந்திரம் - 7. அதி சூக்கும பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 8. காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 9. மகா காரண பஞ்சாக்கரம்
- ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
- ஒன்பதாம் தந்திரம் - 16. ஆகாசப் பேறு
- ஒன்பதாம் தந்திரம் - 17. ஞானோதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்
- ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
- ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்
- ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்
- ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம்
- ஒன்பதாம் தந்திரம் - 23. முத்தி பேதம் கரும நிருவாணம்
- ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை
- ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
- ஒன்பதாம் தந்திரம் - 26. வரையுரை மாட்சி
- ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
- ஒன்பதாம் தந்திரம் - 28. தோத்திரம்
- ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
Paadal
-
1. தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.
-
2. ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.
-
3. ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.
-
4. ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
-
5. பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.
-
6. வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.
-
7. பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
-
8. தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.