
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
பதிகங்கள்

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.
English Meaning:
Through Five Dances Siva Performs Five ActsFive are the dances
That He the Form-Formless performs;
The Five dances He dances
The Five acts to perform;
The Five acts He performs
With Sakti-Grace in Him;
And so the Lord dances with Sakti
That is of honey-speech.
Tamil Meaning:
அருவம், உருவம் அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளை உயிர்களின் பொருட்டுக் கொள்கின்ற சிவன் படைத்தல் முதலிய ஐந்தொழிக்கு ஏற்ப ஐந்து வகை வடிவங்களையும், அவற்றிற் குரிய பெயர்களையும் கொண்டு செய்தலை நாடகமாக உடையவன். ஆகையால் அவன் செய்யும் தொழில்கள் யாவும் அருள் காரணமாகச் செய்வனவே அந்நிலையில் அத்தொழிலை அவள் ஐந்தாக வகுத்து அம்மையோடு உடனாய் நின்று திருக் கூத்தாடுகின்றான். அக்கூத்தும் ஐந்தாகும்.Special Remark:
அகளம் - உருவம். சகளம் - உருவம். இற்றைக் கூறவே, இனம் பற்றி அருவுருவமும் கொள்ளப்பட்டது. ``ஆடி`` என்பது பெயர். ``நடம் ஐந்து`` என்றது, பொன், வெள்ளி, செம்பு, இரத்தினம், பல்வகைக் கூட்டு, என்பவற்றாலாகிய மன்றங்களில் செய்யும் நடனத்தை எனவே, மன்றம் ஐந்தாதல் பற்றி நடனம் `ஐந்து` எனப்பட்டதாம். பொன் மன்றம் முதலியன முறையே `தில்லை` கூடல்` திருநெல்வேலி, திருவாலங்காடு, திருக்குற்றாலம்` என்னும் தலங்களில் உள்ளவை. ஆகம் - திருமேனி ஐந்தொழிலுக்கு ஏற்ற ஐந்து திருமேனிகளாவன யன், மால், அரன், மகேசுரன் சதாசிவன் ஆகிய திருமேனியின் அயன் முதலிய மூவரையும் இங்கு, `சம்பு பக்கத்தினர்` என்க. ஆன தொழில், தான்என்று கொண்டு தொழில், அருளால் ஆவன` என ஒருசொல் வருவிக்க.``அகள சகளத்தன் ஐங்கருமத்து ஆகம் ஆன நடம் ஆடி`` எனத் தொடங்கி, `பாகனாய்` என ஆக்கம் வருவித்து, `ஆன நடம் ஐந்து` என முடிக்க. ``ஐந்தொழில் செய்து`` என்பதைத் `தொழில் ஐந்து செய்து` என மாற்றிக் கொள்க.
இதனால் முடிநிலைக் கூத்தாகிய ஆனந்தக் கூத்திற்குமுன் அதற்கு ஏதுவான வேறு கூத்தக்களையும் சிவன் செய்தருளுகின்றான் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage