
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து
பதிகங்கள்

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.
English Meaning:
Siddha-Lord DancesIn the elements Five,
In the senses Five,
In the sense organs Five,
In the Vedas and Agamas together Five,
(In Kala, and Kala (Time`s Eternity)
In the Higher Siva Tattvas Five,1
(Suddha Vidya, Iswaram, Sadakyam, Sakti, Sivam)
In all these, intermingling
The Great Siddha-Lord dances.
Tamil Meaning:
(முன் மந்திரத்தில், `அளைத்துப் பொருள்களின் இயக்கங்கட்கும் காரணமாய் நிகழ்வது சிவன் கூத்து` என்பது கூறப் பட்டது. இம்மந்திரத்தில், அவை இயங்குங்கால், அக்கூத்து அவற்றோடு உடனாயும் இயங்கி திகழ்கின்றது` என்பது கூறப் படுகின்றது. இவையே இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வேற்றுமை. எனவே மேற்கூறிய மந்திரத்தின் பொருளே இம்மந்திரத்திற்கும் ஆகின்றது.)இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
பாரதத்தை அதன் சிறப்புப் பற்றி, `ஐந்தாம் வேதம்` என்றல்போல வேதத்தின் பொருளை உபவிருங்கணம் செய்யும் புராண இதிகாசங்களை உபசாரத்தால் `வேதம்` என வைத்து, ``வேதங்கள் ஐந்து`` என்றார். துணை நூல்களாய் நின்று முதல் நூலின் பொருளை விரித்து விளக்குதல் ஓதும் - நூல்களில் சொல்லப்படுகின்ற கலை, காலம் இவை வித்தியா தத்துவங்களில் தலையாயவை. ஊழி, உலகத்தின் நிலைப்புக் காலம். `அண்டம் ஐந்தில் போதம்` என மாற்றியுரைக்க. அண்டம் ஐந்து, நிவிர்த்தி முதலிய கலைகளில் உள்ள அண்டத்தின் வகை ஐந்து, போதம் - அறிவு. இஃது உயிர்களின் அறிவு, என்றது அதன் நிகழ்ச்சியை. புணர்தல் - உடனாய் நிற்றல்.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage