ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. நேர்ந்திடும் மூலன் சரியை நெறியேதென்
    றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
    ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
    தோர்ந்திடுஞ் சுத்தசை வத்த துயிரதே.
  • 2. உயிர்க்குயிர் ஆய்நிற்றல் ஒண்ஞான பூசை
    உயிர்கொளி நோக்கல் மகாயோக பூசை
    உயிர்ப்புறும் ஆவாகனம் புறப் பூசை
    செயிர்க்கடை நேசம் சிவபூசை யாமே.
  • 3. நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
    தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
    பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
    கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
  • 4. பத்தர் சரியை படுவோர் கிரியையோர்
    அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
    சுத்த இயமாதி தூயோகர் சாதகர்
    சித்தர் சிவஞானம் சென்றெய்து வோர்களே.
  • 5. சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
    சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
    ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
    நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
  • 6. கிரியையோ கங்கள் கிளர்ஞான பூசை
    அரிய சிவனுரு அமரும் அரூபம்
    தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
    உரியன நேயத் துயர்பூசை யாமே.
  • 7. சரியாதி நான்கும் தகும்ஞான நான்கும்
    விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
    பொருளானது நந்தி பொன்னகர் போந்து
    மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.
  • 8. சமையம் பலசுத்தி தன்செயல் அற்றிடும்
    அமையும் விசேடம் அரன்மந் திரசுத்தி
    சமையுநிரு வாணங் கலாசுத்தி யாகும்
    அமைமன்னு ஞானமார்க் கம்அபி டேகமே.