
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 5. சரியை
பதிகங்கள்

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்த சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே
English Meaning:
Goals of the Four PathsJnanis merge the I in You;
Yogis attain Siddhi and Samadhi;
Those in Kriya miss not daily worship;
And in Chariya they perform pilgrimages many.
Tamil Meaning:
சிவமாந் தன்மையை எய்தினோரே மெய்ஞ் ஞானம் முற்றினவராவர். மனம் சமாதிநிலையில் அடங்கப் பெற்றவரே அட் டாங்கயோகம் முற்றினவராவர். ஒருநாளேனும் அர்ச்சனை தவறி யொழி யாதபடி செய்தவரே நுணுகியதான கிரியை முற்றினவராவர். நெடுந் தொலைவான நாட்டிலும் சென்று மூர்த்தி தலம் தீர்த்தங்களை முறைப்படி வணங்கினவரே தாம் ஏற்றுக்கொண்ட சரியை முற்றின வராவர்.Special Remark:
``தான்`` என்றது பன்மை யொருமை மயக்கம்.இதனால், `சரியை முதலியவற்றில் நிற்பவர் அவற்றைக் கடைப்பிடியாகக் கொண்டு முதிர்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage