ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
    அந்த அபர பரநாத மாகியே
    வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
    உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.
  • 2. உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
    தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
    வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
    உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.
  • 3. தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
    மூவர் பிரான்என முன்னொரு காலத்து
    நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
    மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
  • 4. பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
    மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
    செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
    கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.
  • 5. தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க
    அனித்திடும் மேலை அருங்கனி யூறல்
    கனிச்சுட ராய கயிலையில் ஈசன்
    நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.
  • 6. நேரறி வாக நிரம்பிய பேரொளி
    போரறி யாது புவனங்கள் போய்வரும்
    தேரறி யாத திசைஒளி யாயிடும்
    ஆரறி வார்அது நாயகம் ஆமே.
  • 7. மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
    கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
    சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
    நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.
  • 8. நாவிகண் நாசி நயன நடுவினும்
    தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
    தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
    மூவரு மாக உணர்ந்திருந் தாரே.