
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
பதிகங்கள்

தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.
English Meaning:
Sadasiva is the Finite Source of Formless and Formed SoundsHe is the Lord of Devas;
He creates the directions ten;
Of yore they hailed Him as Lord of Three;1
He is the Lord of the Four2 too;
In them He stands as Being Central,
Thus verily, the Immortal Celestials say.
Tamil Meaning:
`தேவர்கள் தம் தம் பதவி விருப்பத்தால் விரும்பு கின்ற முழுமுதற் கடவுளாவான் பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற நூற்றெட்டு உருத்திரர்கட்கும் தலைவன்` என்றும், `பொது வாக - மும்மூர்த்திகள் என்று யாவராலும் சொல்லப்படுகின்ற - அயன், அரி, அரன் - என்பவர்கட்குத் தலைவன்` என்றும் தொன்மையாக பலர் சொல்லிவர, `முதற்கடவுள் அவ்வளவில் நில்லாது மேற்குறித்த மூவர்க்கும் மேலாய் நான்காமவனாய் உள்ள மகேசுரனை உள்ளிட்ட நால்வர்க்கும் தலைவனாவான்` எனச் சமயக் கணக்குக்களைக் கடந்து நிற்கின்ற உண்மை நூல்கள் உண்மையைச் சொல்லா நிற்கும் என உயர்ந்தோர் கூறுவர்.Special Remark:
இஃது, `ஐந்தொழிற்கும் முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே பரம்பொருள் எனக்கூறியது. `பத்துத் திசை உதயம் செய்யும் தேவர்` என மாற்றி வைத்து உரைக்க. பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற உருத்திரர் இவர். இவர் என்பதைச் சிவஞான போதம் பேருரையிலும் காணலாம். 3 ``முன்னொரு காலத்து`` என்றது பழைமை குறித்தவாறு. அப்பழைமையாவது சைவாகமங்களை உணராத உலகரது காலங்களாம். `முன் ஒரு காலத்து என` என முன்னே கூட்டிமுடிக்க. ``நடு`` என்றது அப்பாற்பட்ட நிலை அஃது ஆகு பெயராய் அந்நூல்களைக் குறித்தது; வாய் - உண்மை. ``விண்ணவர் மேவு பிரான்`` என்பதை முதலில் எழுவாயாக வைத்து, அதனை, ``பிரான், பிரான்`` என்னும் பயனிலைகளோடு முடிக்க.இதனால், `முன் மந்திரங்களில், ``பரம்`` என்றும், ``வள்ளல்`` என்றும் குறிக்கப்பட்ட முதற் கடவுளாவான் இவன்`` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage