
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
பதிகங்கள்

நாவிகண் நாசி நயன நடுவினும்
தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.
English Meaning:
Five Centres where the Light of Lord isIn the navel, eye and nose tip,
In the centre of eyebrows, and within crown of head
In these five places, Lord resides as Light Divine;
He is the One Lord
The Devas saw as Three,
Brahma, Vishnu and Isa.
The Apara becomes the Para Nada
From Para Nada arises the Para Kalas
With those Kalas the Jnana Sun within dawns.
Tamil Meaning:
கொப்பூழ், கண், மூக்கு, புருவநடு, தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேல் என்னும் ஐந்திடங்களிலும் தோன்றி ஒளி வீசுகின்ற அந்த ஆதித்தனைத் தேவர்கள், `உருத்திரன், மால், அயன்` என்னும் மும்மூர்த்திகளாக அறிந்து இன்புற்றிருக்கின்றனர்.Special Remark:
`சிவனே தனது திகார சத்தியால் மும்மூர்த்திகளைக் காரணக் கடவுளராகச் செய்து உலகை நடத்துவிக்கின்றான்` என்றபடி. தொடக்கத்திலும்,``அவனை யொழிய அமரரும் இல்லை,
... ... ... அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை``
என்று அருளிச்செய்தார். மூலாதார சுவாதிட்டானங்களில் ஒளி சிறிதாய் விளங்கலின் அவற்றிற்கு, மேற்பட்ட இடங்களையே கூறினார். எல்லாவற்றிற்கும் முதலான பிராணன் இயங்குவது மூக்கு வழியாக ஆதலின் அதனையும் கூறினார். ``நயனம்`` என்றது ஆகு பெயராய்ப் புருவங்களை உணர்த்திற்று.
இதனால், சிவாதித் தனது சிறப்புணர்த்தி, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
`இவ்வதிகாரத்தில் சொல்லப்பட்ட உண்மைகளை உணரும் உணர்வே ஞானித்தனாம்` என்பது கருத்து.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage