
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
பதிகங்கள்

விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
அந்த அபர பரநாத மாகியே
வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.
English Meaning:
Sun`s Para Kalas evolve from Bindu Through Para NadaThe Bindu expand into two Apara and Para
The Apara becomes the Para Nada
From Para Nada arises the Para Kalas
With those Kalas the Jnana Sun within dawns.
Tamil Meaning:
சுத்த மாயையின் ஒருகூறு சிவனது சத்தியால் உலகத் தோற்றம் நிகழத்ற்குக் காரணமாகப் பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் பக்குவப்படுத்தப்பட்ட பகுதி, `மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும்` என இரண்டு பகுதியாய் விரியும். அவை முறையே `பரவிந்து` என்றும், `அபரவிந்து` என்றும் பெயர் பெறும். அவற்றினின்றும் முறையே சொல்லுலகத்தின் அதிசூக்கும நிலையாகிய பரநாதமும், சூக்கும நிலையாகிய அபர நாதமும் தோன்றும். (இவையே அதிசூக்குமை வாக்கும், சூக்குமை வாக்கும் ஆகும்.) பின்பு அவற்றினின்றும் வைகரி முதலிய வாக்கு வடிவமான சொல்லுலகத்தையும், `கலை, தத்துவம், புவனம்` என்னும் அத்துவாக்களையும் சிவன் தோற்றுவித்து, அவை வழியாக ஆன்ம அறிவினிடத்தே அருணோதயம் போன்ற ஒளியை விளங்கச் செய்வான்.Special Remark:
கலை, `சாந்திய தீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என முறையே ஒன்றன்பின் ஒன்றாய் ஐந்தாகி விரியும். ஏனை ஐந்து அத்துவாக்களும் இந்த, `கலை` என்னும் அத்துவாவில் அடங்கும். அவையாவன `வன்னம், பதம், மந்திரம்` என்னும் சொல் வகையும். `தத்துவம், புவனம்` என்னும் பொருள் வகையுமாம். பரம் - சிவன், `பரம் கலையாதி வைத்து உள்ளத்து அருணோதயம் என உந்தும்` என முடிக்க. செய்யுள் நோக்கி அபரங்கள் முன்வைக்கப்பட்டன.இதனால், உலகத்தோற்ற முறை ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage