
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்
பதிகங்கள்

நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசைஒளி யாயிடும்
ஆரறி வார்அது நாயகம் ஆமே.
English Meaning:
He is Supreme LightHis dazzling Light as Wisdom True spreads;
Unhindered, it invades worlds all;
It is the light pervasive, none can fathom;
Who does know it as the Light Supreme!
Tamil Meaning:
உயிர்களது அறிவினுள்ளே நுண்ணறிவாய் நிறைந்து நிற்கின்ற ஒரு பெரிய ஒளி, தடையின்றி எங்கும் போய் வருகின்ற பகலவனது தேர் செல்லாத இடத்தில் அங்குள்ள இருளை நீக்குகின்ற ஒளியாய் இருக்கும். இம்மறை பொருளை உணரும் அறிவுடையோர் யாவர்? எவரேனும் இருப்பாராயின் அவரது அறிவே தலைமை சான்ற அறிவாகும்.Special Remark:
நேர்மை - நுண்மை. ``அவர் நின்றதோர் நேர்மையும்`` என்று அருளியது காண்க. திசை - இடம். பகலவன் தேர் செல்லாத இடம் உயிரினது அறிவு. மேலேயும், ``மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு`` என்றது காண்க.இதனால் முன் மந்திரங்களில் கூறப்பட்ட சிவனது நுண்ணிலை அறிதற்கரிதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage