ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
    மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
    எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
    தஞ்சுட ராக வணங்கு தவமே.
  • 10. பாரை யிடந்து பகலோன் வரும்வழி
    யாரு மறியார் அருங்கடை நூலவர்
    தீரன் இருந்த திருமலை சூழ் என்று
    ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.
  • 2. பகலவன் மாலவன் பல்லுயிர்க் கெல்லாம்
    புகல்வ னாய் நிற்கும் புண்ணிய நாதன்
    இகலற ஏழுல கும்உற ஓங்கும்
    பகலவன் பல்லுயிர்க் காதியு மாமே.
  • 3. ஆதித்தன் அன்பினொ டாயிர நாமமும்
    சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
    வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
    ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.
  • 4. தானே உலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
    தானே உலகுக்குத் தையலுமாய் நிற்கும்
    தானே உலகுக்குச் சம்புவுமாய் நிற்கும்
    தானே உலகுக்குத் தண்சுட ராகுமே.
  • 5. வலயம்முக் கோணம்வட் டம்அறு கோணம்
    துலைஇரு வட்டம்துய் யவ்வித ழெட்டில்
    அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழா
    மலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.
  • 6. ஆதித்தன் உள்ளினில் ஆனமுக் கோணத்தில்
    சோதித் திலங்கும்நற் சூரியன் நாலாங்
    கேத மறுங்கேணி சூரியன் எட்டில்
    சோதிதன் ஈரெட்டில் சோடசந் தானே.
  • 7. ஆதித்த னோடே அவனி இருண்டது
    பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
    சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
    வேதப் பொருளை விளங்ககி லீரே.
  • 8. பாருக்குக் கீழே பகலோன் வரும்வழி
    யாருக்கும் காணஒண் ணாத அரும்பொருள்
    நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
    ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே.
  • 9. மண்ணை இடந்ததின் கீழ்ஓடும் ஆதித்தன்
    விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
    கண்ணை இடந்து களிசெய்த ஆனந்தம்
    எண்ணும் கிழமைக் கிசைந்துநின் றானே.