
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
பதிகங்கள்

பாரை யிடந்து பகலோன் வரும்வழி
யாரு மறியார் அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழ் என்று
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந் தாரே.
English Meaning:
Sun Circumambulates SahasraraThe sun that penetrates Earth (Muladhara)
His route none knows,
That are but versed in worldly lore;
He circumambulates Mount of Meru, (Sahasrara)
Of the Lord Unconquerable;
—Thus they say;
Only those who have realized Truth
Know His abode real.
Tamil Meaning:
ஆதித்தன் நிலத்திற்குக் கீழிருந்து அதனைப் பிளந்து கொண்டு மேலே எழுவது போலத் தோற்றுகின்ற அந்த வழியின் உண்மையை, தாழ்ந்த நிலையில் உள்ளார்க்கு உரிய நூலை மட்டுமே உணர்ந்தவர்களில் ஒருவரும் அறியமாட்டார். (அதனை அவ்வாறே கொள்வர். உண்மையில் அது புறநிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு மூலா தாரத்திற்குக் கீழ் நின்றுமேல் எழுதலும் ஆகும்.) இனி அவ்வாதித்தின் விண்ணில் காணப்படும் பொழுது அவன் சிவபிரான் எழுந்தருளி யிருக்கின்ற மகாமேரு மலையை வலம் வருகின்றான் என்றே கொள்வர். (உண்மையில் அதுவும் புற நிலையில் நில உருண்டையின் சுழற்சியும், அகநிலையில் மேற்கூறியவாறு வீணாத் தண்டைச் சூழ்ந்து ஒளிர்வதுமேயாகும்.) கோள்களின் இயக்கம் பற்றியும், பிராணா யாமம் பற்றியும் இனிது விளங்கக் கூறும் நூல்களின் வழி அவற்றை உணர்ந்த ஒரு சிலரே மேற்கூறிய உண்மைகளை உணர்ந்திருந்தனர்.Special Remark:
தீரன் - உலகை ஆக்கவும், அழிக்கவும் வல்ல ஆற்ற லுடையவன்; சிவபிரான், ஊர் - ஊர்தல், முதனிலைத் தொழிற்பெயர். கிணற்றுத் தவளைபோல் இல்லாமல் வெளியே பல ஊர்களையும் சுற்றினவர்` என்பது நயம். கிணறு போல்வன பருப்பொருளைக் கூறும் நூல்கள். ஆதித்தனது புறநிலையையும் உண்மையாக ஒரு சில பேரறிவாளரே அறிந்திருந்தமை இம்மந்திரத்தால் விளங்குகின்றது.இதனால், ஆதித்தனது நிலையின் அருமையை உணர்த்தும் முகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage