
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
பதிகங்கள்

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்ககி லீரே.
English Meaning:
Experiences in the Sphere of Sun WithinWhen you reach the Sphere of Sun
Your worldly thoughts fade into darkness;
The cognitive organs four no more contend—
The Sakti in the light within reveals
The truth of Vedas
But alas! You seek not to understand!
Tamil Meaning:
ஆதித்தன் இருண்ட பொழுது அவனோடு உலகமும் இருண்டுவிட்டது. வேறுபட்ட நான்கு வேதங்களின் மொழிகளும் வெறும் பிதற்றலாய்ப் பயனற்றுப்போயின. அவ் வாறாகவும் `ஆதித்தனுக்குள்ளே சிவசத்தி நின்றே உலகிற்கு ஒளியைத் தருகின்றாள்` எனக் கூறுகின்ற வேத மொழியின் பொருளை, நீவிர் உணரமாட்டீர்.Special Remark:
`ஆதித்தன் இருண்டது சத்தி சிவனது கண்ணைப் புதைத்த பொழுது` என்பது வெளிப்படையாகலின் அதனைக் கூறா தொழிந்தார். `கழிந்தது` என்பது பன்மை யொருமை மயக்கம். வேதமொழி பயன்படாமை அதன்படியான செயல்கள் நிகழாமை யாலாம். ``சோதி`` என்றது ஆதித்தனை.இதனால், `ஆதித்தனை வழிபடுதல் சிவ சத்தியை வழி படுதலேயாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage