
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன்
பதிகங்கள்

செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே.
English Meaning:
Sun and Other Gods Adore the Lord to Receive IlluminationThe fiery Sun and the Celestials rest
Circumambulate the show-clad Mountain Meru;
And adore the luminous Lord`s Holy Feet in Tapas,
That they might, themselves illumined be.
Tamil Meaning:
(சூரியன் முதலாகக் காணப்படுகின்ற அனைத்து ஒளிப் பொருள்களின் ஒளியும் சிவனது ஒளியேயன்றி, அவற்றினுடையன அல்ல. அஃது எங்ஙனம் எனின்,) சூரியன் நாள்தோறும் மகாமேரு மலையை வலம் வருதல் தெளிவு. ஏனைத் தேவர்கள் அவ்வாறு வலம் வருதலைப் பலர் அறியாராயினும் யோகியரும், ஞானியரும் அதனை நன்கறிவர். `அவர் வலம்வருதல் எதன்பொருட்டு` எனின், எங்கட்கு விள்ககாகி நின்று பயன் தருகின்ற சிவனாகிய கடவுளின் திருவடி ஒளிகள் தங்களிடத்துப் பொருந்தி விளங்குதற் பொருட்டேயாம். வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் தவத்தால்l ஆகலின் அவர் அதனைச் செய்கின்றனர்.Special Remark:
பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `தேவர்` என்பதற்கு `ஒளியுடம் புடையவர்` என்பதே பொருள். அது சூரியனிடத்தே இனிது விளங்கு தலால், `அவன் முதலாக` என்றார். தேவர் அனைவரையும் கூறினமையால், திங்கள், வியாழன், வெள்ளி முதலிய கோள்களை யும், மற்றும் நாண்மீன் விண்மீன்களையும் வேறு வேறெடுத்துக் கூறல் வேண்டாதாயிற்று. மஞ்சு - மேகம். ``காரணம்``, `நிமித்தம்` என்னும் பொருட்டாய் நின்றது. ``எம் சுடர்`` என்றது, நாயனார் தம்கூற்றாக் கூறியது. திருவடி சத்தியாகலின் அதனையே சிவன் ஒளியாகக் கூறினார். மகாமேருமலை சிவன் எழுந்தருளியிருக்கின்ற கயிலையைத் தன்னிடத்தில் உடையது. வணங்குதலையே ``தவம்`` என்றமையால் பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம், ``நின்முகம் காணும் மருந்தினேன்`` என்பதிற்போல்,``நாயகன் கண்ண யப்பால் நாயகி புதைப்ப எங்கும்
பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றிக்
தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பின்
தேயமார் ஒளிகள் எல்லாம் சிவன்உருத் தேசது`` *
என்னும் சிவஞான சித்திச் செய்யுளை நோக்குக.
இதனால் ஆதித்தன் சிவனொளியைப் பெற்று விளங்குதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage