ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
    உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
    தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
    உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.
  • 2. தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
    போனவி யோகி புகலிடம் போந்துபின்
    ஆனவை தீர நிரந்தர மாயோகம்
    ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.
  • 3. தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
    ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து
    தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன்
    ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.
  • 4. சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
    தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச்
    சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன்
    புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.
  • 5. ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
    தானற மோனச் சமாதியுள் தங்கியே
    தானவ னாகும் பரகாயஞ் சாராதே
    ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.
  • 6. செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
    செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
    செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
    செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.
  • 7. உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள்
    பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன்
    என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி
    தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.
  • 8. எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
    தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம்
    அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல்
    இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.