
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
பதிகங்கள்

தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
போனவி யோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.
English Meaning:
When Samadhi is not ReachedAll these of the Yogi,
This life in Samadhi ended;
When that does not happen,
He will in this world take refuge again,
And by Lord`s Grace
Resume Yoga in practice continual
And thus complete the undertaking unfinished.
Tamil Meaning:
யோக நிலை முற்றப்பெறாது உடல்விட்ட யோகிக்கு மேற்சொல்லியன எல்லாம் பொருந்தும். அவன் அவ்வாறு மேற்சொல்லிய இடங்களிலெல்லாம் தங்கிப் பயன்களை நுகர்ந்தபின் அங்கு நின்றும் பூமியில் வந்து பிறந்து விட்ட குறையாகிய வினையைப் புசித்துத் தீர்ந்தபி திருவருளின் துணையைப் பெற்று இடைவிடாது யோகத்தின் முதிர்ந்த நிலைகளை எய்துவர்.Special Remark:
யோகத்தின் முடிநிலை சமாதி நிலையாகலின் யோகம் முற்றப் பெறாது உடல் விட்ட யோகியை, ``சமாதி கை கூடாது போன வியோகி`` என்றார். முதற்கண் ``தான்`` என்றது அவனையே யாகலின், அதனை, `தனக்கு` எனத் திரித்துக் கொள்க. `புகலிடத்தினின்றும்` என ஐந்தாவது விரிக்க.இதனால், `யோக நிலை முற்றப் பெறாது உடல் விட்ட யோகிகள், மீண்டும் பிறந்து அது முற்றப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage