
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி
பதிகங்கள்

உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள்
பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி
தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.
English Meaning:
Jnani Shapes Disciple towards GodhoodWho intense seek the Grace of Lord Exalted
Their birth to sunder,
He himself draws them
Into the fold of His devotees dear;
Like it, the Jnani draws like him
His disciples, in love abounding,
In his own way subtle,
Toward Godhood, He shapes them.
Tamil Meaning:
ஞானத்தைப் பெற விரும்பும் உறுதியுடையவன், `சிவனையன்றி வேறொன்றையும் நினைத்தல் கூடாது` என்னும் எண்ணமாகிய விதையை முதலிலே தனது உள்ளமாகிய நிலத்தில் ஊன்றி, (அந்த எண்ணம் சத்திநிபாதத்தால் உண்டாகும்) அங்ஙனமே சிவனையே பலகாலும் நினைத்தும், போற்றியும் வருவானாயின், அந்தச் சிவனே அவனுக்கு ஞானியர் குழாத்தை அவனுக்கு அருள் புரியும் வண்ணம் கூட்டுவிப்பான். (சேரமான் பெருமாளுக்கு வன் றொண்டரைக் கூட்டுவித்ததுபோல.) அங்ஙனம் கூட்டுவிக்கப்பட்ட பின் அவன் தானும் அக்குழாத்து ஞானியர் போல உலகத்தார் அனைவரையும் தன் மக்கள் போலக் கருதி, `அவர்களும் தான் பெற்ற பேற்றைப் பெற வேண்டும்` என விரும்புவான். அத்தகையோனுக்குச் சிவன் அவன் விரும்பியவாறெல்லாம் காட்சி தருவான்.Special Remark:
`அவ்வாறு நீவிரும் செய்து ஞானத்தோர் பெறும் பயனைப் பெறுவீராக` என்பது குறிப்பெச்சம். `வாளா செத்தார் பெறும் பயன் யாது` என வானாவியவரை வெறுத்து, `அவர் பெறும் பயன் யாதுமில்லை` எனவும், `பயன்பெறும் வழிகள் இவை` எனவும் கூறிய நாயனார், `அவற்றுள் சிறந்ததாகிய ஞானத்தைப் பெறுதல் எவ்வாறு` என அறிய விரும்புவார்க்கு அதனை இம்மந்திரத்தாற் கூறினார்.``கரு`` என்றது எண்ணத்தை. உரவோன் - திட்பம் உடையவன். குலம் - குழாம். `என்ன புதல்வர்க்கும்` என வரற்பாலது எதுகை நோக்கி, ``என்னப் புதல்வர்க்கும்`` என வந்தது. வேண்டுதல், தான்பெற்ற இன்பத்தை அவரும் பெறுதலை. ``ஞானி`` என்றது முன்பு உரவோனாய் இருந்து பின்பு ஞானம் பெற்றவனை. `இம்மையிலும் தான் வேண்டியவாறே ஈசனைப் பெற்று நிற்பான்` எனவே, உடல் விட்டபின் அவன் ஈசனைப் பெறுதல் சொல்லவேண்டாவாயிற்று.
இதனால், முன் மந்திரத்து வினாவியவர்க்குப் பயன்பெறும் வழி காட்டப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage