ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியை
    வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
    முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்
    சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.
  • 2. சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
    எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
    பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
    அந்தமி லானும் அருள்புரிந் தானே. 
  • 3. அப்பரி சேஅய னார்பதி வேள்வியுள்
    அப்பரி சேஅங்கி அதிசய மாகிலும்
    அப்பரி சேஅது நீர்மையை யுள்கலந்
    தப்பரி சேசிவன் ஆலிக்கின் றானே.
  • 4. அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
    அப்பரி சேயவ ராகிய காரணம்
    அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
    டப்பரி சாகி அலர்ந்திருந் தானே. 
  • 5. அலர்ந்திருந் தானென் றமரர் துதிப்பக்
    குலந்தருங் கீழங்கி கோளுற நோக்கிச்
    சிவந்த பரமிது சென்று கதுவ
    உவந்த பெருவழி யோடிவந் தானே. 
  • 6. அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
    வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
    சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
    அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.
  • 7. செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்
    அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்
    சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்
    குவிமந் திரங்கொல் கொடியது வாமே.
  • 8. நல்லார் நவகண்டம் ஒன்பதும் இன்புறப்
    பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
    வில்லார் வரையை விளங்கெரி கோத்தனன்
    பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 
  • 9. நெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே
    அளிந்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை
    விளிந்தா னதுதக்கன் வேள்வியை வீயச்
    சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யாளே.