
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
பதிகங்கள்

சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்
எந்தை யிவனல்லம் யாமே உலகினிற்
பந்தஞ்செய் பாதத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தமி லானும் அருள்புரிந் தானே.
English Meaning:
In a vain attempt to quellThe confusion that ensued
Hari rising bragged;
``Not He, but I am the beginning of things``
And so fell into this world below
A prey to Passion`s consuming fetters;
Then repentant he performed tapas
And the Lord that has no beginning nor end
Bestowed His Grace on him.
Tamil Meaning:
வீரபத்திரர் தன்மேற்கொண்ட சினந்தணிந்து நின்றதை அறிந்து அச்சம் நீங்கி எழுந்த மாயோன் `எம் தந்தையே; நாங்கள் இத்தக்கன் போலச் சிவநிந்தை செய்பவர் அல்லேம்; (ஆதலின், எங்களைத் துன்புறுத்தாதீர்)` என்று சொல்லி மண்ணில் பதிந்த அவரது பாதங்களில் வீழ்ந்து துதிக்க, சிவனேயாயுள்ள அவரும் அவன்மேல் இரக்கங்கொண்டு ஒறுத்தலை ஒழிந்தார்.Special Remark:
வீரபத்திரர் மாயோனை வெகுளாது சினம் தணிந்தது, அவர் அவனை ஒறுக்கச் சென்றபொழுது சிவபெருமான், வான் மொழியாக, `சினம் தவிர்தி` என்று கூறினமையாலாம். `எழுகின்ற` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. தான், அசைநிலை. உம்மை, சிறப்பு. ``யாமே`` என்ற ஏகாரம் அசைநிலை. இதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது. பந்தம் - சம்பந்தம். `உலகினில் பந்தம்செய் பாதம்` என்றது, அவ்வாறாதலின் அருமை குறித்தவாறு. `பாசம்` என்பது பாடம் அன்று. ``தவம்`` என்பது துதியை.இதனால், சிவபெருமான் மாயோனது பிழையைப் பொறுத்து அவனுக்கு அருள்செய்தமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage