
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
பதிகங்கள்

அப்பரி சேஅயன் மால்முதல் தேவர்கள்
அப்பரி சேயவ ராகிய காரணம்
அப்பரி சங்கி யுளநாளும் உள்ளிட்
டப்பரி சாகி அலர்ந்திருந் தானே.
English Meaning:
And thus it is with Aya, Mal and the rest of Gods;And thus it is they came to what they are;
And thus it is that they are there;
And thus does the Lord sit serene within
To reward the heart that daily seeks Him true.
Tamil Meaning:
மாயோன் வீரபத்திரரிடம் கூறியவாறே அயன், மால் முதலிய தேவர் பலரும் சிவனை நிந்தியாதொழியினும், நிந்தித்த தக்கனைத் திருத்தமாட்டதவராயினர். அன்னராயினும், தக்கனது வேள்வியில் அவர் ஒருங்கு கூடியிருந்து அவனுக்கு ஊக்கம் மிகச் செய் தமைக்குக் காரணம், தானும் அவர்போலவே அச்சங் கொண்டவனா கிய அக்கினி தேவன், ஏனை இடங் காலங்களிற் போலவே தன் கடமை யுட்பட்டுத் தன் செயலைச் செய்யக் கிளர்ந்து நின்றமையேயாம்.Special Remark:
`காரணமாவது` என்று தொடங்கினமையால், `அலர்ந் திருந்தான்; அதுவே` என உரைக்க. உள நாள் - பிற இடங்களில் உள்ள காலம். ``நாளும்`` என்பது பாடமாயின், ``உள்ள பல நாள்களிலும் போல`` என உரைக்க.இதனால், தக்கன் வேள்வியில், குற்றத்திற்கு ஆளானவருள் அக்கினி தேவன் முதல்வனாயினமை கூறி, அவ்வாறாகவும் மன்னித் தருளினமை குறிக்கப்பட்டது. அக்கினிதேவன் தன் காரியத்தைச் செய்யாதொழியின், வேள்வி நடத்தற்கே வழி இல்லையாதல் அறிக.
`தேவர் பலர்க்கும் இடும் அவியைத் தான் சுமக்கலாற்றாத அக்கினிதேவன் ஒருமுறை நீருள் ஒளிந்துகொள்ளத் தேவர் பலரும் வருந்தித் தேடியபொழுது மீன்கள் சில அவன் நீருள் ஒளிந்திருத்தலை அறிவிக்க, அறிந்து அவனைப் பிடித்துச் சென்றனர்` என்பதொரு வரலாறு காஞ்சிப் புராணச் சகோதர தீர்த்தப் படலத்துள் கூறப்படுதலை நோக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage