ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
    தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
    அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
    விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 
  • 2. விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
    தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
    எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
    மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. 
  • 3. இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
    இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
    இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
    முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே. 
  • 4. பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
    ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
    மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
    சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. 
  • 5. விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
    தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
    அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
    விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. 
  • 6. வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
    தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
    கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
    மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 
  • 7. ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
    காணிய விந்துவாம் நாத சகலாதி
    ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
    சேணுயர் சத்தி சிவதத்வ மாமே
  • 8. சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
    அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
    பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
    நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.