
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
பதிகங்கள்

பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே.
English Meaning:
Sakalas three are;Those who have attained Siddhis miraculous,
Those who have attained Mukti (Jivan)
Those who have attained neither
—All powerless to conquer Malas three
And in sound and other senses immersed.
Tamil Meaning:
சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.Special Remark:
எனவே, `அபக்குபவர்`, சாதகர், சீவன் முத்தர்` எனச் சகலரும் மூவராகின்றனர்.பெத்தத்த சித்து, ஆன்மா. முத்தச் சித்து, சிவம். இவ் விரண்டும் ஒருமைப்பட இரண்டிலும் நிற்பவரே, `சீவன்முத்தர்` எனப்படுவர். சித்துமாய் (சிவமாயும்) மலமயக்கத்தை முற்றக் கழிக்கமாட்டாமல் அதனைக் கழித்தற்பொருட்டு முயல்பவரே `சாதகர்` எனப்படுவர். `சித்தாயும்` என உம்மையை மாற்றியுரைக்க. சத்தம் - உலக ஆரவாரம்.
ஈற்றடியினால் சகலருள் அபக்குவரது தன்மையை விளக்கினார். எனவே, அந்நிலையை உடையார் அபக்குவர் என்பது போந்தது. ஊடு, எழனுருபு. மத்தம் - மயக்கம். `சகலத் துளார் ஊடுற்றாரும், மாட்டாரும் ஆவர் என முடிக்க. `ஆவர்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `சகலர் மூவராவர் இவர்` என்பது கூறப்பட்டது. இவருள்ளும் தவத்தால் பிரளயாகலரோடு ஒப்பவும், விஞ்ஞான கலரோடு ஒப்பவும் அவ்வப்புவனங்களிற் செல்வார் உளர் என்பது மேலே குறிக்கப்பட்டது.
[இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் மந்திரம் இவ்வதிகாரத்தின் இறுதியதாம்.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage