
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
பதிகங்கள்

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே.
English Meaning:
Vijnanakalas are of gradations three;Those who in quiescent Anava alone abide; (the Pralayakala among Vijnanas)
So are Pralayakalas of gradations three;
And Sakalas too;
Thus are there nine classes of Jivas,
Evolving in gradations separate.
Tamil Meaning:
இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.Special Remark:
இங்கு, `வித்தியேசுரர், மகேசுரர்` இருவரையும் வெறெண்ணியும், உருத்திரராவர் அனைவரையும் ஒன்றாக வைத்து ஏனையோரை உடன்வைத்து எண்ணியும் தொகை கூறினார், `சகலரும் இவ்வாறெல்லாம் ஆவர்` என்பது உணர்த்துதற்கு.மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `சகலத்தர் அகலராம் ஒன்பானான வேறுயிர்களாவார்` என்று எடுத்துக்கொண்டு, கேவலம் மேவுவோரும், தங்கும் இருமலரும் ஆவர்` என முடிக்க. `விஞ்ஞானராகிய மேவுவோரும்` எனவும், `தஞ்ஞானராகிய இருமலரும்` எனவும் இயையும். `இருமலரும்` என்பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. ``வேறுயிர்கள்`` என்றது, `இயற்கையாலன்றிச் செயற்கையால் உயரும் உயிர்கள்`` என்றதாம். சகலரை இவ்வாறு கூறவே, பிரளயாகலரும் விஞ்ஞானகலராதல் சொல்லாமே அமைந்தது.
இதனால், விஞ்ஞானாகலர், பிரளயாகலர்` என்னும் வகையைச் செயற்கையால் பெறுவோரும் உளர்` என்பது கூறப்பட்டது.
`கேவலம்` என்பது, இங்கு `ஒன்று என்னும் பொருள்பட நின்றது. இத்திருமந்திரத்தைப் பாடம் பலபட ஒதுவாரும், `விஞ்ஞானகலர் முதலிய ஒவ்வொரு வகையினருள்ளும் அங்ஙனமே விஞ்ஞானகலர் முதலிய மூவர் உட்பிரிவினராக உளர்` என இயற்கை நிலையினரே வேறோராற்றால் ஒன்பது வகையினராவர் என்பது இதற்குப் பொருளாக உரைப்பாருமாவர். அவ்வுரையால் சிறப்பு ஒன்றும் இல்லாமை அறிக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage