
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
பதிகங்கள்

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே.
English Meaning:
They who are of five malas hard rid,Themselves Siva become;
They blemishless become,
They become Siddhas,
Attain state of Mukti Finale,
They uproot Jiva`s bondage
End cycle of births;
They alone are,
Who truth of peerless Tattvas realised.
Tamil Meaning:
ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.Special Remark:
நாடிக் காணுதலே, `தத்துவ தரிசனம்` எனப்படும். தெளியக் காணுதலே தத்துவ சுத்தியாம். தத்துவ சுத்தி எய்தினோர் ஆன்மதரிசனமும் சிவரூபமும் உடன் நிகழப்பெற்றுப் பின் சிவதரிசன சிவயோகங்களால் ஆன்மசுத்தி எய்தப் பெறுவராகலின் ``பசுபாசம் அற்றோர்`` என்றாற்போல இறந்த காலத்தாற் கூறாது, ``பவமான தீர்வோர்`` என எதிர்காலத்தாற்கூறினார். `பசு பாசம்` என்பன, அந்த அந்த ஞானத்தைக் குறித்த ஆகுபெயர்கள். `நாடிக்கண்டோர் அற்றோர், தீர்வோர்` எனக் கூட்டுக.இதனால், `ஞானம் பெறினும் அது முதிராதவழிப் பரமுத்தி கூடாது` என்பது கூறப்பட்டது. இவ்விரு திருமந்திரங்களும், `விஞ்ஞானகலராதலே வீடுபேறு போலும்` என மலையாமைப் பொருட்டு அருளிச்செய்யப்பட்டமையின், இவ்வதிகாரத்தவாயின.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage