
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
பதிகங்கள்

ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே
English Meaning:
Rid themselves of Anava entireAnd consciousness lost of all Jiva memory,
They Bindu and Nada become,
The highest heavenly goal
Of one-noss with Siva Tattva;
Albeit all three, Sakala and the rest of yore possessed,
The primal impurities triple,
Anava, Maya and Karma.
Tamil Meaning:
ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ் விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!Special Remark:
துற்ற-செறிவித்த. `அவித்யா` என்னும் ஆரியச்சொல்; `அவித்தா` எனத் திரிந்தது. ``நனவு`, என்றது உபலக்கணம். அஞ்ஞானத்தில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள், கேவல சாக்கிராதியும், சகல சாக்கிராதியுமாம். அவற்றை நீங்கினோர் சுத்த சாக்கிரம் முதலியவற்றை எய்துவர். அவர்கட்கே தத்துவங்கள் பலவும், `உருவம் தரிசனம், சுத்தி` என்னும் முறையில் படிப்படியாக விளங்கும். அங்ஙனம் விளங்கவே மாயா காரியங்களாகிய அத்தத்துவங்களும், அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு நிற்கும் கன்மங்களும் நீங்கும். இவற்றின் நீக்கத்திற்கு, மூலமலமாகிய ஆணவம் நீங்கியதே காரணமாகும். அதனால், ``ஆணவம் துற்ற ... ... சகலாதி`` என்றார்.காணிய `செய்யிய` என்னும் வினையெச்சம். `காணிய ஆம் விந்து நாத சகலாதி` என மாற்றுக. சகலம் - எல்லாம். ``சகலாதி`` என்றதில் ஆதி, தத்துவம். இது தமிழ் வழக்காய்ப் பன்மை குறித்து நின்றது, ஈற்றடியையும் `சிவதத்துவம் சத்தியாம்` என மாறிக் கூட்டுக. `தத்வம்`, ஆரியமாயே நின்றது. `நாதம், விந்து முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியமாகிய தாத்துவிகங்களும் ஆணவமாதி அடைந் தோர் பொருட்டு` எனவே, ஆணவமாதி உள்ள துணையும் இவை இனிது காட்சிப்படா என்பது விளங்குதலின், ஆணவ முதலிய அகன்றோர்க்கு அவை காட்சிப்படுதல் அருத்தாபத்தியால் பெறப் படும் என்றவாறு. `அவர் அன்றே` என்பது பாடம் அன்று.
இதனால், `விஞ்ஞானகலரேயாயினும் மெய்ஞ்ஞானமின்றி வீடு அடையார்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage