
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- இரண்டாம் தந்திரம் - 1. அகத்தியம்
- இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
- இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்
- இரண்டாம் தந்திரம் - 4. தக்கன் வேள்வி
- இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்
- இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு
- இரண்டாம் தந்திரம் - 7. எலும்பும் கபாலமும்
- இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்
- இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
- இரண்டாம் தந்திரம் - 10. திதி
- இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
- இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்
- இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்
- இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை
- இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்
- இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 17. அபாத்திரம்
- இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை
- இரண்டாம் தந்திரம் - 19. திருக்கோயிற் குற்றம்
- இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்
- இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 22. குரு நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை
- இரண்டாம் தந்திரம் - 24. பொறையுடைமை
- இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்
Paadal
-
1. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
-
2. தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே.
-
3. உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே.
-
4. தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயனு மாமே.
-
5. அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே.
-
6. உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.
-
7. உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியாய் விளங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரம்
தள்ளுயி ராம்வண்ணந் தாங்கிநின் றானே.
-
8. தாங்கருந் தன்மையும் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்தும் மாற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே.
-
9. அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே.