
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 10. திதி
பதிகங்கள்

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே.
English Meaning:
As body, life, and world,As sea, cloud and cloud-laden sky,
Permeating all, indestructible and continuous
The Lord stands in majesty
The True way that never closes.
Tamil Meaning:
சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.Special Remark:
``உலகம்`` என்றது, விதந்தோதாதன பிறவற்றை. வான் - மேகம். இடை - வெளி; ஆகாயம். உலப்பிலி எங்கும் - அள வில்லாத இடம் எங்கணும். ``அடையாப் பெருவெளி அண்ணல்`` என்றது உடம்பொடு புணர்த்தல். அன்றி, `அண்ணல் ஆதலின்` எனச் சொல்லெச்சம் வருவித்துரைத்தலுமாம். அங்ஙனம் வருவிப்பின், இத்தொடர் முதலில் வைத்து உரைக்கப்படும்.இதனால், `ஒருவன் பிற எல்லாப் பொருளிலும் நிற்றல் எவ்வாறு கூடும்` என்னும் ஐயத்தினை, இங்கும் நீக்குதற்கு அங்ஙனம் நிற்குமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் சிருட்டி அதிகாரத்தில் வந்த ``தேடுந்திசை எட்டும்`` என்னும் மந்திரம் இங்கு மீளவும் காணப்படுகின்றது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage