
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 10. திதி
பதிகங்கள்

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே.
English Meaning:
As love, wisdom and meekness He stands,As pleasure and pleasurable union He stands,
As Time`s Beginning and End He stands,
As Five elements filled He stands in love divine.
Tamil Meaning:
முதற்கண் உலகுயிர்களை அவற்றிற்கு அம்மை அப்பனாய் நின்று படைப்பவனும் சிவபெருமானே. பின்பு அவற்றைத் தன் மக்களாகக் கொண்டு புரப்பவனும் அவனே. இவை `தேவர், மக்கள்` என்னும் சிறப்புடைப் பிறப்பினர்க்கு மட்டுமன்று; `விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் சின்னஞ்சிறிய பிறவிகட்குமாம்.Special Remark:
``வனைதல்`` மூன்றனுள் முன்னது `ஆக்குதல்` எனவும், இடையது `திருத்தல்` எனவும், ஈற்றது `இரண்டனையும் செய்தல்` எனவும் பொருள் தந்தன. ``உலகு, பிறவி`` என்பன சொல் வேறுபட்டுப் பொருட்பின்வருநிலை அணியாய் நின்றன. சால் முதலிய நான்கும் பெரியனவும், சிறியனவுமாய உடம்புகளை உணர்த்தி நின்றன. மற்றும் - ஏனைய கலங்களும். தூதையை, `மொந்தை` என்பர். `தூதையும்` என்னும் உம்மை தொகுத்தல். ``வனையவல்லான்`` என்றதனால், இது குறிப்புருவகம்.இதனால், சிவபெருமானது ஆற்றலின் பெருமையை மீளவும் நினைப்பித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage