
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 10. திதி
பதிகங்கள்

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மன்னுடல் அண்ணல்செய் வானே.
English Meaning:
A miracle indeed it isTo sustain the myriad lives in the Universe;
Not less so,
When after total destruction
He draws them unto Himself;
He supports too
That Seventh World
The Path of yoga leads to.
Tamil Meaning:
அண்ணலாகிய சிவபெருமான், உயிர்களோடு உடனாய் நிற்பினும், அவற்றால் அறிதற்கரியனே. யோக முறையால் பிராண வாயுவை அடக்கி மூலாதாரத்தினின்றும் எழுப்பப்படும் அங்கியின்வழி மேல்நிலமாகிய புருவ நடுவை அடைந்து தியான சமாதிகளால் அவனை உணரினும், உண்மையில் ஞான முதிர்ச்சி ஒன்றுமே அவனைப் பெறுவிக்கும். அதனால், சரியை முதலிய மூன்றால் அவனை வழிபடும் தவநெறியில் நிற்பினும், அதனில் செல்லாது உலகரோடு கூடி அவநெறியில் தாழினும் அவன் பிறவியை அறுத்தல் இன்றி அதனைக் கூட்டவே செய்வான்.Special Remark:
`ஒன்றுமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல். `அவனை நல்கும்` எனச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. தணிதல் - தாழ்தல்; கீழ் நிலையை எய்தல். மன் உடல் - நீங்காது வரும் பிறப்பு. செய்வான் - உண்டாக்குவான். ``மண்ணுடல்`` என்பது பாடமன்று.இதனால், அருளல் தொழிலது சிறப்பை உணர்த்துமுகத்தான், அதற்குச் சிறப்பு வகையால் தோற்றுவாய் செய்யப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage