
ஓம் நமசிவாய
The Next Song will be automatically played at the end of each song.
Tandhiram
Padhigam
- ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
- ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
- ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
- ஆறாம் தந்திரம் - 4.துறவு
- ஆறாம் தந்திரம் - 5.தவம்
- ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்
- ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்
- ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 9. தவவேடம்
- ஆறாம் தந்திரம் - 10. திருநீறு
- ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்
- ஆறாம் தந்திரம் - 12. சிவ வேடம்
- ஆறாம் தந்திரம் - 13. அபக்குவன்
- ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
Paadal
-
1. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.
-
2. ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.
-
3. தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
-
4. வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.
-
5. முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
-
6. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.
-
7. மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.
-
8. முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
-
9. மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.