
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பதிகங்கள்

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.
English Meaning:
Knowledge and IgnoranceEven unto the witless here below
That know not knowledge from ignorance,
Was I; He taught the distinction between the two
And made me know my Self;1
He transformed me into Para2
And made me known to Siva; 3
He, Nandi of hallowed name.
Tamil Meaning:
யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.Special Remark:
`போல` என்னும் செயவெனெச்சத்தது ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. அவ் எச்சத்திற்கு, `யான்` என்னும் எழுவாய் வருவிக்க. ``அறிவறியாமை`` என்பது முன்னர்ப் போந்ததனைச் சுட்டும் அளவாய் நின்றது. பேதித்தல் - வேறுபடுத்தல், நீக்குதல். தன்னை - சிவத்தை. ``சிவம்`` என்பது, சிவமாய் நின்ற நிலையைக் குறித்தது. அறிவித்தல், இங்கு அறியாமை புகாதவாறு காத்தல். `அங்ஙனம் காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவனாயினேன்` என்பது கருத்து.இதனால், `குருவருளில் உறைத்து நிற்றலாலே ஞேயத்தழுந்து தல் உண்டாம்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage