
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம்
பதிகங்கள்

மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.
English Meaning:
In Jneya is the Primal Form of the SpiritAs he holds Mudras three of divine potent
The Jnani Supreme attains Higher Forms Three;
And in rapturous dance he enters Jneya
And himself the Primal Form of Spirit becomes;
The Jiva that is Jnathru (Knower).
Tamil Meaning:
மேலே கூறிவந்த ஞாதுரு முதலிய மூன்றன் இயல் புகளையும் சிவசத்தி இனிது விளங்கக் காட்ட அங்ஙனம் கண்ட உணர்வே ஞேயத்தைப் பற்றுதற்குரிய மேலானஞானம். அந்த ஞானத்தில் ஆரவாரித்து திருநடனத்தையுடைய சிவனே ஞேயம். அந்த ஞேயத்தில் அழுந்தித்தானும், தனது ஞானமும் தோன்றாது. முதற்பொருளின் இயல்பு முற்றும் தனது இயல்பாக விளங்கப் பெற்ற ஆன்மாவே ஞாதுரு.Special Remark:
`இங்ஙனம் முத்தி நிலையிலும் இம்மூன்றும் உண்மை யால், முத்தி என்பது பெறுவானும், பேறும் இல்லாத ஒன்றாகப் பிறர் கூறும் நிலைகள் அல்ல` என்றவாறு. எனவே திரிபுடி அற்ற நிலை என்பது, `அவை அறியப்படாதநிலை` எனப் பொருள்படுதலன்றி, `அவை இல்லாதொழியும் நிலை` என்றதாயிற்று. இஃது இவ்வதிகாரத்து முதற்கண் காட்டிய வினா வெண்பாவாலும் நன் கறியப்படும். சொரூபம் - இயல்பு. சிவசத்தியை, ``மிகு சத்தி`` என்றார். `மூன்றையும் மிகுசத்தி பாலித்த` என்க. ``பாலித்த`` என்னும் பெயரெச்சம், ``முத்திரை`` என்னும் செயப்படு பொருட் பெயர் கொண்டது. முத்திரை - குறி உணர்வு. `முத்திரையே பரஞானம்` என ஏகாரம் விரித்துமுடிக்க. `நட்டம்` என்றது அதனை உடைய பொருளை. `சொரூபனே ஞாதுருவன்` என ஏகாரத்தை மாற்றிக் கூட்டியுரைக்க. `ஞாதுரு` என்னும் வடசொல்லை. `ஞாதுரு வாம் தன்மை யுடையவன்` எனத் தமிழ் முறைப்பட ஓதினார்.இதனால், ஞாதுரு ஞான ஞேயங்களது இயல்புகளும், அம் மூன்றும் என்றும் உள்ள பொருள்களாதலும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage