
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
பதிகங்கள்

அளந்த துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.
English Meaning:
When Para Becomes ParasivaAttaining Divine Knowledge-Form of Turiya State;
And omniscient experience of phenomenal universe
If Para can reach Para-Siva,
Then He belongs to Space
That is Light.
Tamil Meaning:
உயிரினது அறிவின் நிலைமையை அளந்து, அஃது நின்மல துரியத்தை அடைந்தவாற்றினைத் தெரிந்து, அதன்கண் உயிரினது அறிவினை வாங்கித் தன் அறிவினுள் அடக்கிக் கொண்ட நின்மல சிவம். அந்நிலையில் உயிரினது உடம்பும், உலகமும் இருப் பினும் அவையில்லாதது போலத் தனது அருளினுள் அடக்குமாற்றால், உயிரினது, `யான், எனது` என்னும் பற்றை அறுத்துத் துரியத்திற்கு மேற் பட்ட பரசிவமாய்ப் பொருந்தக் கிடைத்தால், ஆன்மா அந்தப் பரசிவ -மாகிய பராகாயத்தில் அடங்கிவிடும் பேற்றினையும் பெற்றுவிடும்.Special Remark:
``உளம்`` என்று அறிவினை. ``அஃது`` என்றதும் அதன்மேல் உள்ள பற்றினையே. வெளியன் ஆதற்கு வருவிக்கப் பட்டது. உம்மை சிறப்பும்மை.இதனால், சிவன், உணர்வொடுக்கம் செய்யுமாற்றால் உயிர் ஒடுக்கம் செய்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage