
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம்
பதிகங்கள்

செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.
English Meaning:
Tattva Involutes Into MayaThe Tattvas that confuse sense organs five,
And cognitive organs internal
Expanding unintermittent
Finally (in Maya) merge;
This the fate of universe,
Inevitable it is.
Tamil Meaning:
செவி முதலிய ஐந்து ஞானேந்திரியங்கள், மனம் முதலிய நான்கு அந்தக் கரணங்கள், பிரகிருதி ஆகப் பத்தினையும் பற்றி நின்று செலுத்துகின்ற உயிர்கள் அவற்றைப் பலதலைப் பட்டு விரிந்து செல்லவிடாது சிவம் ஒன்றையே நோக்கிக் குவிந்து செல்லுமாறு செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் செலுத்தாமையால் அவை பல வழியாக விரிந்து செல்லத் தாமும் அவ்வாறே முதற்கண் உலகில் விரிந்து செல்கின்றன. ஆயினும் அவை முன் சொல்லிய வற்றுள் குவிந்த பொழுது, சராசரங்களாகிய அனைத்து உடம்புகளும் உயிர்களும் சிவத்தில் ஒடுங்கிச் சிறிதும் நீங்காதனவாய் இருக்கும்.Special Remark:
அவி இன்றிய - அடங்குதல் இல்லாத. ``ஐந்தும்`` என்ற குறிப்பால் பிரகிருதி தழுவப்பட்டது. `முன்பு விரிந்து, பின்பு குவிந்த வழி` என்க. `சாராசதரந்தாமே தவிர்வொன்றிலாதவாம்` என்க. சரம் - இயங்கு திணை. அசரம் - நிலைத்திணை. `தாம், ஏ` அசைகள்.இதனால் உலகத்தின் விருவும், ஒடுக்கமும் ஆமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage