
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
பதிகங்கள்

நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.
English Meaning:
Turiyatita ExperienceTranscending even thought of God
Is Atita State;
The sense organs (Indriyas) no more cognise
The Sound and the rest;
Pervasive Jiva becomes;
The Malas three, the Karmas two, the Jiva one,
The experiences (Avasthais) Five,
All these subside;
Thus subsiding, the Beginningless One wakes
Into the Turiyatita Jagrat State.
Tamil Meaning:
ஆன்மாவிற்குச் சிவனை அறிகின்ற அறிவும் நழுவுவதே `அதீதம்` எனப்படும் முடிவுநிலைவாய்க்கும். அஃதாவது, ஆன்மாச் சிவனை அறியும் பொழுது, `யான் சிவனை யறிகின்றேன்` என அறிகின்ற அறிவும் அதைவிட்டு நழுவினால் அதன் பின்பே துரியாதீதநிலை வாய்க்கும்` என்பதாம். (ஆகவே அவ்வறிவு நழுவிய நிலை துரியமாதல் பெறப்பட்டது.) இனி அவ்வாறின்றி, ஞானேந்திரியம், கன்மேந்திரியம் அவற்றின் விடயங்களாகிய சத்தாதி, வசனாதி முதலிய தத்துவ தாத்துவிகங்கள் நீங்கியபோதிலும், `யான்` என்னும் உணர்வு நீங்காது. ஆகவே, அது நீங்குதல் நின்மல சாக்கிரம் முதலியவற்றிலாம். அவையும் நீங்கினால் பரசாக்கிரம், பரசொப்பனம் முதலியனவே இயற்கை நிலையாகிய முத்தியைக் கூட்டுவிக்கும்.Special Remark:
நந்தி யறிவு - நந்தியை அறிவும் அறிவு. விட - நீங்க. `யான்` என்பது நீங்குவதாகிய நின்மலாவத்தையை. `நின்மலாவத்தை` என ஒரு சொல்லாற் கூறிப்போகாது அனைத்தையும் முறையானே எடுத்தோதினார். அவற்றை அதீததம் முதலாகக் கீழ்நோக்கிக் கூறும் பொழுது `யான்` என்னும் உணர்வு ஒன்றைவிட மற்றொன்றில் மிக்கிருக்கும் - என்பது உணர்த்துதற்கு துரியத்தில் பாசநீக்கமே உளதாகும். சிவப்பேறு அதீதத்திலே உண்டாகும். ``நல ஐந்தும்`` என்றதனால் அவை நின்மலாவத்தையாயின. `அவையும் நந்தில்` என்றதனால் `நனவாதி` எனப்பட்டவை பராவத்தையாயின. நின்மலா வத்தை பராவத்தைகளின் இயல்பு மேற்போந்த அதிகாரங்களில் கூறப் பட்டன. அனாதி - இயற்கை. `அனாதியை முட்டும்` என இயைக்க.இதனால், முப்பத அனுபவம் நின்மலாவத்தை பராவத்தைகளில் நிகழும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage