
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
பதிகங்கள்

ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.
English Meaning:
Yoga Way Also Leads to the Three StatesEven some who know not the letter Fifty
Reach the States three above said;
They did by (directing) their breath in Yogic Way
Into Para;
Thus with Siva they one became.
Tamil Meaning:
எழுத்தறி கல்வியில் அறியவேண்டிய எழுத்துக்கள் ஐம்பது. அவற்றுள் ஒன்றையேனும் அறியாதவரும் உளர். அவரும் மக்களுட் சிலராகவே இருக்கின்றனர்: (அவர்கள் நற்கதி அடையு மாறில்லை. ஆகவே,) கல்வி கற்றவர் அக்கல்வியின் முடிநிலையாக முப்பதங்களைக் கொள்ளுதல் வேண்டும். கொண்டு, செம்மையான, உயர்ந்த வாசியோகத்தைச் செய்தல் வேண்டும். அவ்யோகம் `ஹம்ஸ:` என்னும் மந்திரமாக அமைதலின், அதுவே தொம்பதமும், தத்பதமுமாய் நிற்கும். நிற்கவே, அது, `யோஹம்` என்று ஆகி, சீவன் சிவனாகின்ற பயனைத் தகும்.Special Remark:
``கல்லா நெஞ்சில் - நில்லான் ஈசன்`` ஆதலின், எழுத்தறியாதவரை இகழ்ந்தார்* ``அறியாதவரும்`` என்பதன்பின், `உளர்` என்பது வருவிக்க. `அவரும்` என்னும் உண்மை தொகுத்த லாயிற்று. சிவனை நினையாது செய்யும் யோகம் வெறு ஹடயோக மாய் ஆன்மிகப் பயனைத்தாராது ஆதலின், `உம்பனை நாடி முப்பதத் திடை வாசி செலுத்திட` என்றார். `உம்பரன்` என்பது குறைந்து நின்றது. `நாடிச் செலுத்திட` என இயையும். உரைபதம், வினைத் தொகை. செம்பரம் - செவ்விதும், மேலானதும் ஆகிய பொருள். அப் பொருளாம் தன்மையைக் குறிக்கின்ற பதத்தையே அதுவாக உப சரித்தார் `ஹம்ஸ` மந்திரம் இயல்பாக இயங்கும் சுவாசத்தாலே அமைதலின் அதனை, `அசபா மந்திரம்` என்பர். செபிக்கப்படாத மந்திரம்` என்பது இதன் பொருள். `பேசாத மந்திரம்` என்றும் கூறுவர். `தம் யோகம், பரயோகம்` எனத் தனித்தனி முடிக்க. தம் யோகம் - தம்மால் செய்யப்படும் யோகம் பரயோகம் - மேலான யோகம். ``ஆகும்`` என்றது `ஆதலாகிய பயனைத் தரும்` என்றபடி.இதனால், `முப்பத அனுபவத்தை வாசியோகத்தால் பெறலாம் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage