
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 19. முப்பதம்
பதிகங்கள்

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.
English Meaning:
Siva is Beyond the Three PadasBeyond the State of Tvam-Pada and Tat-Pada
In the state of Asipada, Sakti wondrous stands;
But Siva remains still beyond,
Beyond the reach of speech
In unimaginable immanence
In all, in all.
Tamil Meaning:
முப்பதங்களுள், `அசி` என்னும் பதமே தத் பதம் என்றும் `துவம் பதம்` என்றும் சொல்லத்தக்கதாய் உள்ளது. (அஃதாவது, இரண்டையும் ஒன்றாகச் செய்கின்றது.) அந்தப்பதத்தில் தான் அருட்சத்தி இருக்கின்றாள். அதனால், வாக்குக்களால் எட்ட முடியாத சிவனும் அந்தப்பதத்திலேதான் கற்பனையாக அன்றி, உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.Special Remark:
தத் - அது. துவம் - நீ. அசி - ஆகிறாய். எனவே, `அது நீ ஆகியாய்` என்கின்ற பொழுது இரண்டையும் ஒன்று படுத்துவது `அசி` ஆதல் உணர்க. பெத்தகாலத்தில் சிவன் சீவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும், முத்தி காலத்தில் சீவன் சிவனாய், `தான்` என வேறு தோன்றாது நிற்றலும் சத்தியினாலேயாகலின், `அசி` என்னும் பதத்திலே நேரிழையாள் உளள் - என்றார். திருவைந் தெழுத்தில் அசிபதமாய் நிற்பது வகாரமும், நகாரமும் ஆம்.``அவன்இவ னானது அவன் அருளால் அல்லது,
இவன் அவன் ஆகான் என்று உந்தீபற``*
எனத் திருவுந்தியார் சீவன் ஒன்றும் மாட்டாமையை வலியுறுத்துகிறது. `உளன்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. `அப்பதத்து` எனச் சுட்டு வருவித்து, `சிவன் கலந்து நின்றான்` எனமுடிக்க.
இதனால், முப்பதத்துள் `அசி` பதத்து உண்மை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage