
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
பதிகங்கள்

தூநெறி கண்ட சுவடு நடுஎழும்
பூநெறி கண்டது பொன்நக மாய்நிற்கும்;
மேனெறி கண்டது வெண்மதி மேதினி,
நீணெறி கண்டுளம் நின்மல னாகுமே.
English Meaning:
Pure Vision inside CraniumIn the Sushumna Nadi Central
The Lord`s Holy Feet will appear;
The lotus centre (Sahasrara),
Within a Golden Sphere is;
Beyond, the upward course (of Kundalini) lifts you
To the Moon`s Sphere that is white;
And there you vision the Pure One.
Tamil Meaning:
தூய நெறியாகிய யோக முறை கைவந்து உண்மையைக் கண்ட அடையாளம், புருவ நடுவில் தோன்றுகின்ற முடி நிலை ஆதாரமாய்க் காணப்பட்டு, மேருமலையின் உச்சியை அடைந்தது போலத் தோன்றும். எனினும் அதுவே முடிநிலையாகாது, அதற்கு மேலேயுள்ள ஏழாந்தானத்திற் சென்றவர் கண்டது சந்திர மண்டலமாம். ஒருவன் அதற்குமேலும் செல்வானாயின், சத்தி சிவ நெறிகளைக் கண்டு மலம் நீங்கிய தூய உணர்வினனாவன்.Special Remark:
`அந்நிலையை அடைவிப்பது மேற்கூறிய பிராசாத யோக நெறியாகிய ஞான கேசரி முத்திரையேயாம்` என்பது குறிப்பெச்சம்.``நெறி`` நான்கனுள் ஈற்றில் உள்ளதில் இரண்டனுருபும், ஏனையவற்றில் மூன்றனுருபும் விரிக்க. பூ - பூமி; நிலம் - ஆதாரம். நகம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. மேதினி - மண்டலம். நீள் நெறி - உயர் நெறி. ``நீணெறி`` என்பது இன எதுகை.
இதனால், கேசரி முத்திரைபற்றிக் கூறப்பட்ட ஞான யோகத்தின் சிறப்புணர்த்து முகத்தானே அம்முத்திரையினது சிறப்புணர்த்தி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage