
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
பதிகங்கள்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனம்ஆம்;
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தமே
ஆக்கும்அச் சுத்தத்தை; யார்அறி வார்களே.
English Meaning:
Mauna is Stillness of Both Thought and SpeechTo attain stillness of Speech and Thought at once is mauna
Mauna sans Speech alone
Is but state of dumbness;
Only when Speech and Thought are alike in mauna
Are you in State Suddha (Perfection)
Who but knows
That Suddha state to bring about?
Tamil Meaning:
வாக்கு, மனம் என்னும் இரண்டும் வாளா இருத்தலே `மௌனம்` என்பதற்குப் பொருளாகும். `அதைவிடுத்து, மனம் எவ்வாறு செயற்பட்டாலும் வாக்கு மட்டும் செயற்படாது வாளா இருத்தல்தான் மௌனம்` எனக் கூறினால் உலகில் ஊமைகளாய் உள்ளார் யாவரும் மௌன விரதிகளாகி விடுவர். வாக்கு, மனம் என்னும் இரண்டும் அடங்கிய தூய நிலையே `சுத்த நிலை` எனப் படுகின்ற அந்த வீடுபேற்றைத் தரும். அந்த உண்மையை அறிகின்றவர் யாவர்?Special Remark:
`அறிந்து வாக்கும், மனமும் மௌனமாய், மோன முத்திரையுடன் இருப்போர் அரியர்` என்பது குறிப்பெச்சம். ``இரண்டும்`` என்றது, `இரண்டன் மௌனமும்` என்றபடி.இதனால், `மோன முத்திரையுடையார் இன்ன நிலையின ராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage