
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
பதிகங்கள்

யோகத்தின் முத்திரை ஓரட்ட சித்தியாம்;
ஏகத்த ஞானத்து முத்திரை எண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி;
யோகத்துக் கேசரி யோகமுத்தி ரையே.
English Meaning:
Yoga Mudra and Jnana MudraSambhavi is the lion among Yoga Mudras
That leads certainly to Siddhis eight;
When Jnana Mudra you seek
Appropriate indeed is Kechari
That is by Vedas lauded high.
Tamil Meaning:
யோகம் கைவந்தமைக்கு அடையாளம் அட்டமா சித்திகள் வாய்ந்தமையாகும். அதுபோல இறைவனின் வேறாகது ஒன்றாகிய அனுபவ ஞானம் கைவந்தமைக்கு அடையாளத்தை ஆராயுமிடத்து மிக்க தகுதி வாய்ந்ததான வேதத்திற் சொல்லப்பட்ட கேசரியாகிய சாம்பவி முத்தரை யோடு கூடிய கேசரி முத்திரையே யாகும். யோக நூலினும் கேசரி முத்திரை சொல்லப்பட்டதாயினும் அஃது யோக கேசரி முத்திரையாம் .Special Remark:
ஆக்கம், இங்கு மிகுதி குறித்து நின்றது `மிக்க தகுதி யுடைய வேதம்` என்றது. ஞான காண்டமாகிய உபநிடதங்களை. அவற்றுட் கூறப்படும் கேசரி முத்திரை. `சாம்பவி முத்திரையோடு கூடிய கேசரி முத்திரை` என்றும், `யோக நாலுட் கூறப்படும் கேசரி முத்திரை தனியாகச் சொல்லப்படும் கேசரி முத்திரை` என்றும் உணர்த்தற் பொருட்டு முறையே ``கேசரி சாம்பவி`` என்றும் ``கேசரி`` என்றும் கூறினார். ஆகவே, ``சாம்பவி`` என்றது, சாம்பவியோடு கூடியது` என்றதாம். யோக கேசரி மூன்றாம் தந்திரத்துள் கேசரி யோகம்` என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டதாம். இதனானே, `உபநிடதங்களிற் கூறப்படும் யோகம் ஞானயோகமே` என்பதும் பெறப்படும்.இதனால், கேசரி முத்திரை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage