
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 17. முத்திரை பேதம்
பதிகங்கள்

தானத்தி னுள்ளே சதாசிவ னாயிடும்;
ஞானத்தி னுள்ளே நற்சிவ மாதலால்
ஏனைச் சிவனாம் சொரூபம் அறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.
English Meaning:
Mauna Mudra Leads to Mukti FinalHe who appears in Adharas is Sadasiva;
He who appears in Jnana is the great Siva;
In the silence of Mauna Mudra, Siva`s form disappears;
That verily is the Mukti Finale, the Ultima Thule.
Tamil Meaning:
`ஆதாரம், நிராதாரம், மீதானம்` என்பன எல்லாம் வரையறைப்பட்ட இடங்களேயாதலின் அவ்விடங்களில் எல்லாம் விளங்குபவன் தடத்த சிவனே. (ஆகவே யோகம் முழுவதிலும் விளங்குபவன் தடத்த சிவனே. அதனால் யோக முத்திரைகள் யாவும் பதமுத்தி அபரமுத்திகளையே தரும்.) ஞானத்தில் சொரூப சிவன் விளங்குதலால் தடத்த சிவனின் வேறாகிய சொரூப சிவனைக் குறிக்கின்ற சின்முத்திரையே முத்திகளிலெல்லாம் முடிந்த முத்தியாகிய பரமுத்தியைத் தரும் முத்திரையாகும்.Special Remark:
போக சிவனாகிய சதாசிவனுக்குமேல் இலய சிவ னாகிய அருவ சிவன் உளனாயினும், `தடத்த சிவன்` என்பது இனிது விளங்குதற்பொருட்டுச் சதாசிவனையே குறித்தார். ``நற்சிவம்`` என்றது, `சொரூப சிவன்` என்றபடி. மோன முத்திரை - ஞான முத்திரை. அஃதாவது சின்முத்திரை. முத்த அந்த முத்தி - முத்திகளில் இறுதியான முத்தி, முத்தியைத் தருவதை ``முத்தி`` எனப் பான்மை வழக்காற் கூறினார். யோகத்தில் கைச்செய்கையேயன்றி, உடல் அமைப்புக்களும், அஃதாவது ஆசன வகைகளும் முத்திரை எனப்படும்.இதனால், `யோகிகளினினும் சிறந்த ஞானிகளாகிய அடியவர் கொள்ளத் தக்கது சின்முத்திரையே` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage