
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
பதிகங்கள்

பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.
English Meaning:
The Lord is tender as Mother-Cow``He is not the Lord, I am the one``
If you this conceit have,
The world will call you a fool;
Tender as the yearning mother cow,
He in me is enshrined,
With serpent, fire and water in His matted lock
He, in amity, stands
He the Holy One.
Tamil Meaning:
`பசு` எனப்படுகின்ற எனது மனத்தைப் பசுமனமாய் இல்லாது திருந்தப்பண்ணி அதனைத் தனக்குக் கோயிலாகக் கொண்ட தலைவன் சிவனேயாகும். அவனை, அங்ஙனம் பசுக்களைத் திருத்தி ஆட்கொள்கின்ற தலைவன் அல்லன்` என்றும், `ஆம்` என்றும் இங்ஙனம் ஐயுற்று உலகம் பிணங்குமாயின் அது பேதையுலகமேயாகும்.Special Remark:
பின்னிரண்டடிடகள், சிவனைச் சிறப்பு வகையால் விளக்குகின்றன. அதனால், முன்னர் ``ஈசன்`` என்று பொதுமையிற் குறித்ததாம். `செஞ்சடைப் புண்ணியன்` என இயையும். `புண்ணியன் - புண்ணியத்தை வடிவாக உடையவனும், அதன் பயனாகின்றவனும்` என்க. தவம் செய்வார் கோடைக் காலத்தில் ஐந்தீ நாப்பண் நிற்றலும், மாரிக்காலத்தில் நீர்நிலையுள் நிற்றலும் செய்வர் ஆதலின் ``அங்கியும் நீரும் பொரா நின்றவர்`` - என்றார். பொருதல், தாக்கப்படுதலும், பொறுத்து நிற்றலும் என்னும் இரண்டனையும் குறித்தது. ``செய் அப் புண்ணியம்`` என விதத்து ஓதினமையால் இங்கு, ``புண்ணியம்`` என்றது இறைவனை நோக்கிச் செய்யும் தவத்தையாயிற்று. பேதைமை உடையவனைப் `பேதை` என்றல் பான்மை வழக்கு. அஃது இங்கு அஃறிணைக்கண் வந்தது. குரால் - பசு.இதனால், உயிர் சிவனுக்கு வடிவாய் நிற்றலன்றிப் பிற தேவர்க்கு வடிவாய் நில்லாமை கூறும் முகத்தால், ஆத்தும லிங்கத்தின் சிறப்பு உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage