
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
பதிகங்கள்

தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தான்நேர் எழுந்த அகாரம தாமே.
English Meaning:
Lord is Light and SupportUpon the heavenly letter five times ten
Well may you behold the self-illumined Light (Aum);
That which thus arises with His Sakti (U)
Like a golden vine that blooms pretty
Is but He that is Akara (A)—the Support Finite.
Tamil Meaning:
பொன்னால் இயன்ற, பூவொடு கூடிய கொடிபோலும் சத்தியுடன் சிவன் ஆன்ம சிற்சத்தியை நேரே பற்றி அதற்குப் பொருள் தருகின்ற நாதமே தன் வடிவாகக் கொண்டு ஆன் மாவின் உணர்வில் விளங்குவான். அதனால் அந்த நாதத்தின் காரிய மாய் ஆகாயத்தின் ஒலியால் விளங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் பொருந்தியுள்ள இடத்தில் அடியவன் அடியார்களுக்கு நேரே விளங்கி நிற்கும் சிவசோதியைக் காண இயலும்.Special Remark:
`ஆதலால் அந்த ஐம்பது எழுத்துக்களையும் இலிங்கமாக வைத்துத் தியானிக்க` என்பது குறிப்பெச்சம். அத்து வாக்களுள் ஏனை ஐந்து கலைகளில் அடக்கம் ஆதல் வெளிப்படை ஆதலின், அவற்றுள் மந்திராத்துவா அக்கலைகளில் அடங்கி நிற்கும் முறையும் வெளிப்படை. ஆகவே நிவிர்த்தி பிரதிட்டா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் ஆதார பீடமாகவும், வித்தியா கலையில் அடங்கி நிற்கும் எழுத்துக்கள் நடுக்கண்டமாகவும் சாந்தி கலையில் உள்ள எழுத்துக்கள் பீடமாகவும், சாந்திய தீத கலையில் உள்ள எழுத்துக்கள் இலிங்கமாகவும் நிற்றல் போதரும்.இம்மந்திரத்தை மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. ``அமர்ந்திடம்`` - என்பதில் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. ``தான்`` இரண்டில் முன்னது வழிபடுபவனையும், பின்னது வழிபடப்பட்டு சிவனையும் குறித்தன. நாதத்தை, `அகாரம்` என்றலும், விந்துவை உகாரம் என்றலும் வழக்கு. அதனால், `சத்தி உகாரமாய் நிற்க` என்பது இங்கு ஆற்றலால் பெறப்படும்.
நிவிர்த்தி கலையுட்பட்ட நம்மனோர்க்கு எழுத்தோசைகள் ஆகாயத்தின் குணமாகிய இசையோசையாம் உபாதியோடு கூடியன்றிப் புலனாகாமையின் அவற்றை, ``வான் நேர் எழுகின்ற ஐம்பது`` என்றார்.
இதனால் அக்கர உணர்வே ஆத்தும லிங்கமாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage