
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்
பதிகங்கள்

சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.
English Meaning:
All the Tattvas are in LingaThe grand pedestal of Sakti holds the Atma Tattvas
The central part of Sakti holds the Vidya Tattvas,
The Linga of Sakti, the Siva Tattvas
Sadasiva is Sakti`s Soul Divine.
Tamil Meaning:
அருளே திருமேனியாகக் கொள்ளும் சிவனது திருவடியாகிய இலிங்கத்தில் பீடம் ஆன்மதத்துவமும், நடுக் கண்டம் வித்தியா தத்துவமும், கண்டத்திற்குமேல் உள்ள பகுதி சிவதத்துவமும் ஆகும். அந்த வகையினதாகிய இலிங்க மூர்த்திமான் சதாசிவராவர்.Special Remark:
இதனுள் ``சத்தி`` என்றது, `அருள்` என்றபடி. முன்னர் ``ஆன்மா`` என்றது ஆன்ம தத்துவத்தையும், பின்னர் ``ஆன்மா`` என்றது மூர்த்திமானையுமாகும். முப்பத்தாறு `தத்துவங்களும் கூடிய கூட்டம் இலிங்க வடிவாம்` என்றதனால் அத்தத்துவங்களால் விளங்குகின்ற ஆன்ம உணர்வும் சிவனுக்கு இலிங்கத் திருமேனியாய் நிற்றல் கூறப்பட்டது. படவே, அவ்வுண்மையை உணராதவர்க்கு அவரது உணர்வு பாசமாயும், உணர்வார்க்கு அவரது உணர்வு சிவமாயும் நிற்கும் என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage